ADDED : நவ 01, 2024 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள கிராமங்களில் இரவு 7:40 மணிக்கு மழை பெய்தது. பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் இரவில் பெய்த மழையால் குளுமையான சூழல் ஏற்பட்டது.
ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட்டை சுற்றி உள்ள பகுதிகள் வெள்ளம் வழிந்து ஓடியது. மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம், பருத்திக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.