/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரேஷன் கடை மின் இணைப்பு துண்டிப்பு வினி ய ோகம் த டைபட்டதால் மக்கள் மறியல்

ADDED : பிப் 20, 2025 05:51 AM

வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் பிலாத்து வாலிசெட்டிபட்டி ரேஷன் கடைக்கு கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பொருள் வினியோகம் தடைபட்டதால் மக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
பிலாத்து ஊராட்சி சார்பில் வாலிசெட்டிபட்டியில் கிராம சேவை மைய கட்டடம் உருவாக்கி புதுவாழ்வு திட்டத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. இங்கு கூடுதலாக இருக்கும் 3 அறைகளில் அங்கன்வாடி மையம், ரேஷன் கடை, 'டான்பெட்' கேபிள் நிறுவனம் செயல்படுகிறது.
ஒட்டு மொத்தமாக ஒரே மின்இணைப்பே உள்ளது. இதற்கு கிராமத்தினர் பொது நிதியில் கட்டி வந்தனர். கேபிள் நிறுவனத்தினரும் பயன்படுத்துவதால் மின் கட்டணம் அதிகம் வந்தது.
மக்கள் கட்டணம் செலுத்தவில்லை. இதனால் நேற்றுமுன்தினம் மின்வாரியத்தினர் இணைப்பை துண்டித்தனர்.
மின்சாரம் இல்லாததால் நேற்று ரேஷன் கடைக்கு வந்த மக்களுக்கு பொருட்கள் வழங்க முடியவில்லை. இதையடுத்து மக்கள் பிலாத்து கொம்பேறிபட்டி ரோட்டில் மறியல் செய்தனர். கூட்டுறவு பணியாளர்கள், மாற்று ஏற்பாடு செய்யப்படும் என கூறவே கலைந்தனர்.