/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நேர்த்தியான வாழ்வுக்கு வாசிப்பு அவசியம் புத்தக திருவிழாவை துவக்கி வைத்த நீதிபதி பேச்சு
/
நேர்த்தியான வாழ்வுக்கு வாசிப்பு அவசியம் புத்தக திருவிழாவை துவக்கி வைத்த நீதிபதி பேச்சு
நேர்த்தியான வாழ்வுக்கு வாசிப்பு அவசியம் புத்தக திருவிழாவை துவக்கி வைத்த நீதிபதி பேச்சு
நேர்த்தியான வாழ்வுக்கு வாசிப்பு அவசியம் புத்தக திருவிழாவை துவக்கி வைத்த நீதிபதி பேச்சு
ADDED : ஆக 29, 2025 03:36 AM

திண்டுக்கல்,: ''நேர்த்தியான வாழ்வுக்கு வாசிப்பு அவசியம்'' என திண்டுக்கல்லில் புத்தக திருவிழாவை துவக்கி வைத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கவுரி பேசினார்.
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்ககம், திண்டுக்கல் இலக்கிய களம் இணைந்து நடத்தும் 12வது புத்தக திருவிழா திண்டுக்கல் அங்கு விலாஸ் பள்ளி மைதானத்தில் நேற்று துவங்கியது. கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கவுரி துவக்கி வைத்தார். முதல் விற்பனையை பயிற்சி கலெக்டர்கள் வினோதினி, சுப தர்ஷினி துவக்கி வைக்க மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் பெற்றுக்கொண்டார். டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, திட்ட இயக்குனர் திலகவதி, சி.இ.ஓ.,உஷா, நுாலக அலுவலர் சரவணக்குமார் இலக்கிய களம் தலைவர் மனோகரன் கலந்துகொண்டனர்.இத்திருவிழா செப்.7 வரை 11 நாட்கள் நடக்கிறது . தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 7:00 வரை இங்குள் ஸ்டால்களில் புத்தகங்களை தேர்வு செய்யலாம்.
கலெக்டர் சரவணன் பேசுகையில் '' விலங்குகளிடம் இருந்து மனிதர்களை பிரித்து காட்டுவது அறிவு, சிந்தனையும் தான். அத்தகைய அறிவும், சிந்தனையும் புத்தகம் வாசிப்பு இல்லாமல் சாத்தியப்படாது. உலகில் இயங்கவரும் மொழிகளில் செம்மொழி அந்தஸ்து பெற்றவை 6 மட்டுமே. அதிலும் எழுத்து, பேச்சு, இலக்கியம் என வகையிலும் செழுமையாக வழக்கில் இருப்பது தமிழ்மொழி மட்டுமே.
மனிதன் ஒவ்வொருக்கும் வாசிப்பு முக்கியமானது. புத்தகம் வாசித்தலே அவனை முழுமையடைய செய்யும். நமது தனிப்பட்ட வாழ்க்கையிலும் புத்தகங்கள் இருக்க வேண்டும். புத்தகங்கள் இல்லாதவரை வாசிப்பு இல்லாத ஒரு மனிதனை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளாது''என்றார்.
நீதிபதி விக்டோரியா கவுரி பேசுகையில்,''நேர்த்தியான வாழ்வுக்கு வாசித்தல் அவசியம். அந்தக்காலத்தில் அறிவியலை , இலக்கியத்தை, சமத்துவத்தை அறிவுக்கு கொண்டு சேர்க்க அதை ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்தார்கள்.
எந்தத்துறையிலும் வாசிப்பு பழக்கம் இருப்பவர்களே சிறப்பாக செயல்படுகிறார்கள். அவர்களே தலைமைபொறுப்புக்கும் செல்கிறார்கள். புத்தக வாசிப்பாளர்களே தங்களின் துறைகளில் சிறந்து விளங்கமுடிகிறது.
நாடு, தலைவர்கள், மாநிலம், ஊர், அறிவியல், சுற்றம், சமூகம், இலக்கியம், வரலாறுகளை தெரிந்துக்கொள்ளும் போதுதான் நாம் யார் என்று நமக்குபுரியும். கற்றலே அறிவை விருத்தியடைய செய்யும். திருக்குறளில் சொல்லாததை யாரும் சொல்லவில்லை. நாம் வாழ்வு நிறைவடைய திருக்குறளும், பாரதி கவிதைகளும் கட்டாயம் வாசிக்கவேண்டும் '' என்றார்.

