/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
உற்பத்தி காபியை விற்க பதிவு அவசியம்
/
உற்பத்தி காபியை விற்க பதிவு அவசியம்
ADDED : ஆக 27, 2025 12:43 AM
தாண்டிக்குடி; காபி விரிவாக்க துணை இயக்குனர் தங்கராஜ் அறிக்கை: இந்திய காபி வாரியம் அனைத்து காபி விவசாயிகளையும் (** india Coffee App** ) இந்திய காபி இணையதள செயலியில் பதிவு செய்யும் பணியை செய்து வருகிறது.
இந்த செயலியில் விவசாயிகளுக்கான காபி மானிய திட்டங்கள், காபி விதை முன்பதிவு , மண் பரிசோதனை போன்ற பல பயனுள்ள அம்சங்கள் உள்ளன. இந்த செயலியில் பதிவு செய்வது அனைத்து விவசாயிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் (EUDR) ஐரோப்பிய ஒன்றிய காடு அழிப்பு இலவச ஒழுகுமுறை அறிவுறுத்தல்படி பதிவு செய்யாத விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காபியினை விற்பனை செய்ய (EUDR) சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காபி விவசாயிகள் அனைவரும் உடனடியாக பதிவு செய்ய தேவையான ஆவணங்களான ஆதார் , வங்கி பாஸ்புக், காபி பயிரிடும் நிலத்தின் சிட்டா மற்றும் அடங்கல், ஓடிபி பெறும் நிரந்தர அலைபேசி எண் தேவையாகும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள காபி வாரிய முதுநிலை, இளநிலை தொடர்பு அலுவலகத்தை அணுக கேட்டுள்ளார்.