ADDED : டிச 29, 2024 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் அருகே முளையூர் கிராமத்தில் அரசுபுறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று தாசில்தார் பாண்டியராஜ் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்புடன் அரசு புறம்போக்கில் இருந்த ஆக்கிரமிப்புகள் மண் அள்ளும் இயந்திரம் மூலம் அகற்றபட்டது.
யாரேனும் ஆக்கிரமிப்பு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டது. மண்டல துணை வட்டாட்சியர் சுந்தரபாண்டியன், எஸ்.ஐ., தர்மர் ,வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.

