/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முத்து சமுத்திரம் குளத்தில் கருவேல மரங்கள் அகற்றல்
/
முத்து சமுத்திரம் குளத்தில் கருவேல மரங்கள் அகற்றல்
முத்து சமுத்திரம் குளத்தில் கருவேல மரங்கள் அகற்றல்
முத்து சமுத்திரம் குளத்தில் கருவேல மரங்கள் அகற்றல்
ADDED : ஜன 11, 2025 05:17 AM

ஒட்டன்சத்திரம் : பரப்பலாறு அணையில் இருந்து நீர்ப்பாசனம் பெறும் முத்து சமுத்திரம் குளம் விருப்பாச்சி ஊராட்சி சாமியார்புதுாரில் அமைந்துள்ளது. பல ஏக்கர் கொண்ட இந்த குளத்தை நம்பி நுாற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. குளம் நிரம்பும்போது பல கி.மீ., ல் உள்ள கிணறுகள், போர்வெல்களுக்கு நீர்வரத்து ஏற்படுகிறது.
இந்த குளத்தில் முளைத்துள்ள சீமை கருவேல மரங்களால் நீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது.இதைஅகற்ற வேண்டும் என தினமலர் நாளிதழ் 'கண்மாய் காப்போம்' பகுதியில் செய்து வெளியானது. இதன் எதிரொலியாக தற்போது இந்த குளத்தில் இருந்த கருவேல மரங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது. மகிழ்ச்சி அடைந்த இப்பகுதி விவசாயிகள் தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.