அடிப்படை வசதிகள் மேம்படுத்த ஆய்வு: தினமலர் செய்தி எதிரொலி
அடிப்படை வசதிகள் மேம்படுத்த ஆய்வு: தினமலர் செய்தி எதிரொலி
ADDED : அக் 24, 2026 12:28 AM
அ நிறம் | அளவு
நத்தம்: தினமலர் செய்தி எதிரொலியாக நத்தம் அருகே சுண்டைக்காய்பட்டியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நத்தம் அருகே பூதகுடி ஊராட்சி சுண்டைக்காய்பட்டியில் சேதமடைந்த ரோடால் கிராம மக்கள் அவதியடைந்து வருவது குறித்து தினமலர் நாளிதழின் இன்பாக்ஸ் பகுதியில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக பி.டி.ஓ.க்கள் முருகேஸ்வரி, ஜெயக்குமார், ஊராட்சி செயலர் வீரபாண்டி உள்ளிட்ட அதிகாரிகள் சுண்டைக்காய்பட்டிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு குடிநீர், தெருவிளக்கு, ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்தனர்.
