/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாக்கடை நீரோடு வரும் தண்ணீரால் நோய் தொற்று அவதியில் பழநி 7வது வார்டு மக்கள்
/
சாக்கடை நீரோடு வரும் தண்ணீரால் நோய் தொற்று அவதியில் பழநி 7வது வார்டு மக்கள்
சாக்கடை நீரோடு வரும் தண்ணீரால் நோய் தொற்று அவதியில் பழநி 7வது வார்டு மக்கள்
சாக்கடை நீரோடு வரும் தண்ணீரால் நோய் தொற்று அவதியில் பழநி 7வது வார்டு மக்கள்
ADDED : அக் 02, 2025 04:04 AM

பழநி : துரத்தும் நாய்களால் தொல்லை, சாக்கடை நீரோடு வரும் தண்ணீரால் நோய்தொற்று அபாயம் என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் பழநி நகராட்சி 7வது வார்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்
பழநி நகராட்சி 7 வது வார்டில் வடக்கு ரதவீதி, கீழ்வடம்போக்கி தெரு,மாசிமலை சந்து, திருநீலகண்டன் சந்து, மாடவீதி, கருப்புசாமி சந்து, குமரவேல் சந்து,தேவேந்திரன் சந்து, ரங்காச்சாரி சந்து,சேஷன் சந்து, வேணுகோபால சந்து, அஞ்சுகத்தம்மாள் சந்து, ரங்கன் சந்து, உடுமலைரோடு, தேரடி, பெரியநாயகி அம்மன் கோயில் ஆகிய பகுதிகள் உள்ளடங்குகின்றன.
இப்பகுதி பழநி நகரத்தின் குறுகிய சந்து, ரோடுகளை உடையது. நாய் தொல்லை மிக அதிகம் உள்ளதால் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அச்சத்தோடு இருக்கின்றனர். தண்ணீரில் சாக்கடை கலந்து வருவதால் நோய்தொற்று அபாயம் உள்ளது.
பெரியநாயகி அம்மன் கோயில் பகுதி என்பதால் விழாக்காலங்களில் அதிகளவில் கூட்டம் இருக்கும். எனவே, நகராட்சி சார்பில் கடைகள் அமைக்க வேண்டுமென்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது.
நாய்கள் தொல்லையால் அவதி ஜோதிலட்சுமி, குடும்பத் தலைவி, குமரவேல் சந்து: இப்பகுதியில் ஜிகா பைப் லைன் தண்ணீர் சாக்கடை நீர் கலந்து வருவதால் நோய் தொற்று ஏற்படும் அச்சம் உள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும். நாய்கள் தொல்லை அதிகமிருக்கிறது.
குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களை தெருநாய்கள் விரட்டுவதால் நடமாட இயலாமல் சிரமம் அடைகின்றனர். டூவீலரில் செல்லும் நபர்களை நாய்கள் துரத்துவதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.
குடிநீரை பரிசோதிக்க வேண்டும் மல்லிகா, குடும்பத் தலைவி, வடக்கு ரத வீதி : கோவை ரோட்டில் சாக்கடையை சீர் செய்ய வேண்டும். நகராட்சி முடியும் இடத்தில் அலங்கார வளைவுகள் அமைக்க வேண்டும்.
குடிநீரை பரிசோதனை செய்து வழங்க வேண்டும். பெரியநாயகி அம்மன் கோயில் அருகே நகராட்சி சார்பில் கடைகள் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை கிடப்பில் உள்ளது. உடுமலை ரோடு காரமடை தோட்டம் அருகே உயர் மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும்.
விரைவில் நடவடிக்கை சுரேஷ் (தி.மு.க), கவுன்சிலர் : குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவது குறித்து நகராட்சி கூட்டத்தில் பேசி உள்ளேன். பாதாள சாக்கடை திட்டம் பிற வார்டுகளில் நடைபெற்று வருகிறது.
நகராட்சி எல்லை பகுதிகளில் அலங்கார வளைவு அமைத்து, வையாபுரி குளக்கரைகள் மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக நகராட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடுமலை ரோடு காரமடை தோட்டம் அருகே உயர் மின் கோபுர விளக்கு அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாய் தொல்லை குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
பெரியநாயகி அம்மன் கோயில் அருகே நகராட்சி சார்பில் கடைகள் கட்ட கோரிக்கை விடுத்து வருகிறேன்.