/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
உறுப்பு தானம் செய்தவர் உடலுக்கு மரியாதை
/
உறுப்பு தானம் செய்தவர் உடலுக்கு மரியாதை
ADDED : ஏப் 19, 2025 01:20 AM
இடையகோட்டை:
ஒட்டன்சத்திரம் அருகே விபத்தில் உயிரிழந்து உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டவர் உடலுக்கு அரசு மரியாதையுடன் மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்பட்டது .
திண்டுக்கல் மார்க்கம்பட்டியை சேர்ந்தவர் கே.பெருமாள் 53. ஏப்.15ல் டூவீலரில் சென்றபோது பள்ளத்தில் கவிழ்ந்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இதை தொடர்ந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உறுப்புகள் தானம் பெறப்பட்டன. திண்டுக்கல் ஆர்.எம்.காலனி மாயானத்தில் நேற்று நடந்த இறுதிச் சடங்கில் பெருமாள் உடலுக்கு திண்டுக்கல் ஆர்.டி.ஓ., சக்திவேல் அரசு சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தாசில்தார் ஜெயபிரகாஷ், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.