/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலில் கனமழை எச்சரிக்கை முன்னேற்பாட்டில் வருவாய்த்துறை
/
கொடைக்கானலில் கனமழை எச்சரிக்கை முன்னேற்பாட்டில் வருவாய்த்துறை
கொடைக்கானலில் கனமழை எச்சரிக்கை முன்னேற்பாட்டில் வருவாய்த்துறை
கொடைக்கானலில் கனமழை எச்சரிக்கை முன்னேற்பாட்டில் வருவாய்த்துறை
ADDED : டிச 12, 2024 05:35 AM
கொடைக்கானல்: வங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான கொடைக்கானல் பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்த நிலையில் முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக ஆர்.டி.ஓ., சிவராம் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: காற்றழுத்த தாழ்வு நிலையால் கொடைக்கானல் மலைப்பகுதியில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னேற்பாடாக அனைத்து வி.ஏ.ஒ.,க்களும் கிராமங்களில் தங்க அறிவுறுத்தல் செய்யப்பட்டு மழை நிலவரம் குறித்து தகவல் உடனுக்குடன் தெரிவிரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மழை பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது.
தாழ்வான பகுதியில் உள்ளோர் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிப்பு குறித்து 94450 00448, 94450 00585 ல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.