/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கருப்பு பேட்ஜ் அணிந்து வருவாய்த்துறை போராட்டம்
/
கருப்பு பேட்ஜ் அணிந்து வருவாய்த்துறை போராட்டம்
ADDED : செப் 30, 2025 04:32 AM

திண்டுக்கல்: ''உங்களுடன் ஸ்டாலின்' திட்ட மனுக்களை முடிவு செய்ய போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். ஆய்வுக்கூட்டம் எனும் பெயரில் பணி நெருக்கடி கொடுப்பதை கைவிட வேண்டும் என்பன உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் 370, கிராம நிர்வாக அலுவலகங்களில் 550, 110 நில அளவையர்கள் என 1030 பேர் நேற்று 'கருப்பு பேட்ஜ்' அணிந்து பணியாற்றினர். இன்றும் போராட்டம் தொடர்கிறது.
வருவாய்த்துறையினர் கூறுகையில், 'கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் அக்.,3-ல் மாலையில் அலுவலக நேரம் முடிவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம். அதன் பின் அக். 6-ல் ஈட்டிய விடுப்பு எடுத்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் 'என்றனர்.