/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வேலை உறுதி திட்டத்திற்கு புத்துயிர் அமைச்சர் ஐ.பெரியசாமி புகழாரம்
/
வேலை உறுதி திட்டத்திற்கு புத்துயிர் அமைச்சர் ஐ.பெரியசாமி புகழாரம்
வேலை உறுதி திட்டத்திற்கு புத்துயிர் அமைச்சர் ஐ.பெரியசாமி புகழாரம்
வேலை உறுதி திட்டத்திற்கு புத்துயிர் அமைச்சர் ஐ.பெரியசாமி புகழாரம்
ADDED : பிப் 01, 2024 06:53 AM

ரெட்டியார்சத்திரம் : ''வேலை உறுதி திட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் புத்துயிர் அளித்துள்ளார்'' என அமைச்சர் ஐ. பெரியசாமி பேசினார்.
ரெட்டியார்சத்திரத்தில் நடந்த இலவச வீட்டு மனைபட்டா வழங்கும் விழாவில் 217 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கிய அவர் பேசியதாவது:
தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கான நலத்திட்டங்கள் வீடு தேடி வருகிறது. 12 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதல் படி தமிழகத்தில் மட்டும் 25 லட்சம் பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கி சாதனை படைக்க முடிந்தது.
அதன் பின் அ.தி.மு.க., ஆட்சியில் ஏழை மக்களுக்கு முறையாக வீட்டுமனை பட்டாக்களை வழங்கவில்லை.
தற்போது திராவிட மாடல் ஆட்சியாக மக்களுக்கான நல்லாட்சியாக வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. வேலை உறுதித் திட்டத்தை மத்திய அரசு முடக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் முயற்சியால் இத்திட்டம் புத்துயிர் பெற்று தங்கு தடையின்றி நடந்து வருகிறது.
இதற்கான கூலியும் உயர்த்தப்பட்டு உள்ளது, என்றார்.
எஸ். பாறைப்பட்டியில் குடிநீர் திட்ட பூமி பூஜையை துவக்கி வைத்தார்.
ஒன்றிய தலைவர் மகேஸ்வரி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் முருகேசன், பேரூராட்சி தலைவர்கள் தனலட்சுமி சண்முகம் சகிலா ராஜா, காங்கிரஸ் வட்டார தலைவர் முருகானந்தம், கொத்தப்புள்ளி துணை தலைவர் ரங்கசாமி, பி.டி.ஓ.,க்கள் தட்சிணாமூர்த்தி, லாரன்ஸ், கிருஷ்ணன், மலரவன் பங்கேற்றனர்.