ADDED : அக் 27, 2024 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை, : நிலக்கோட்டை அருகே அணைப்பட்டியிலிருந்து ஆஞ்சநேயர் கோயில் வழியாக உசிலம்பட்டி பகுதிக்கு செல்லும் ரோடு பள்ளம் மேடாக உள்ளது.
ரோட்டில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள இங்கு புதிதாக ரோடு அமைத்துக் தரக்கோரி பா.ஜ., கட்சியினர் பொதுமக்களுடன் இணைந்து அணைப்பட்டி பஸ் ஸ்டாப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் ,வருவாய்த்துறை பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.