தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பஸ் வசதி கோரி ரோடு மறியல்

பஸ் வசதி கோரி ரோடு மறியல்

பஸ் வசதி கோரி ரோடு மறியல்


UPDATED : நவ 14, 2026 05:54 PM

ADDED : நவ 14, 2026 05:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 05:54 PM ADDED : நவ 14, 2026 05:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

எரியோடு: கோவிலுார் அருகே ஆர்.கோம்பை ஊராட்சி கிழக்கு மெத்தப்பட்டி, மேற்கு மெத்தப்பட்டி, இந்திரா நகர், சித்திரைநாயக்கர் களம் கிராமங்களில் ஏராளமானோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் 3 கி.மீ., துாரம் மலை சார்ந்த பகுதியில் நடந்து, ஆர்.கோம்பையில் அரசு பஸ்சில் ஏறி வெளியூர் செல்கின்றனர். கடந்த ஒரு மாதமாக கோவிலுாரில் இருந்து மெத்தப்பட்டி வரை இயக்கப்பட்ட தனியார் மினிபஸ் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மெத்தப்பட்டிக்கு அரசு பஸ் இயக்க வலியுறுத்தி கோவிலுாரில் சி.பி.ஐ.எம்.எல்., சார்பில் நேற்று மறியல் நடந்தது. மாநிலக்குழு உறுப்பினர் ரவி தலைமையில் மாவட்ட செயலாளர் முருகேசன், நிர்வாகிகள் கந்தசாமி, துரைக்கண்ணன், பாலகிருஷ்ணன், பொதுமக்கள் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தை நடத்திய எரியோடு இன்ஸ்பெக்டர் வினோதா, அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார். தொடர்ந்து மறியலை கைவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us