ADDED : ஜன 16, 2025 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் அருகே பூதகுடியில் கோயில் திருவிழாவில் சுவாமி கும்பிடுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை இருந்து வந்தது.
ஒரு தரப்பினர் கோயில் காளை ஒன்று சொந்தமாக வாங்கி நேற்று காலை அவிழ்த்து விட்டுள்ளனர். ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பினர் இதை கண்டித்து நத்தம்-கொட்டாம்பட்டி சாலையில் உள்ள பூதகுடி விலக்கு பகுதியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் நத்தம்- காரைக்குடி சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது. தாசில்தார் பாண்டியராஜ், -இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய பேச்சுவார்த்தை நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.