ADDED : மே 24, 2025 03:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: தென்னம்பட்டி மந்தை குளத்தில் இந்திரா நகர் சக்திவேல் மகன் நிஷாந்த் 13, நண்பர்களுடன் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி இறந்தார்.
குளத்தில் சட்டவிரோதமாக அதிக ஆழம் வரை மண் எடுத்ததால் இச்சம்பவம் நடந்ததாக அப்பகுதியினர் போலீசில் புகார் செய்தனர்.
இதையறிந்த அங்கு வந்த மண் அள்ளும் நபர்கள் புகார் செய்த நிஷாந்த் உறவினவருக்கு மிரட்டல் விடுத்தனர்.
இதை கண்டித்தும், சிறுவன் இறப்பிற்கு நீதி கேட்டும் ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலையில் நிஷாந்தின் உறவினர்கள் மறியல் செய்தனர். வடமதுரை போலீசார் பேச்சுவார்த்தை நடத்த கலைந்தனர்.