நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கன்னிவாடி: தர்மத்துப்பட்டி வடக்கு காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி பெருமாள் மனைவி பழனியம்மாள் 60,உடல் நலக்குறைவால் இறந்தார்.
உடலை அடக்கம் செய்ய சென்ற நிலையில் அருந்ததியர் மயானத்திற்கு உடலை கொண்டு செல்லும் பாதையை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதாக கூறி நேற்று மாலை சிலர் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
செம்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார், பேச்சுவார்த்தை நடத்தினர். வருவாய் துறை அதிகாரிகள் மூலம் நிரந்தர தீர்வு காண முடிவு செய்ததால் கலைந்தனர்.--

