/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மேன்ஹோல் வழியாக பீறிடும் கழிவுநீரால் ஆறாய் மாறும் ரோடுகள்
/
மேன்ஹோல் வழியாக பீறிடும் கழிவுநீரால் ஆறாய் மாறும் ரோடுகள்
மேன்ஹோல் வழியாக பீறிடும் கழிவுநீரால் ஆறாய் மாறும் ரோடுகள்
மேன்ஹோல் வழியாக பீறிடும் கழிவுநீரால் ஆறாய் மாறும் ரோடுகள்
ADDED : ஜன 15, 2024 11:34 PM

திண்டுக்கல் மாநகரில் பரவலாக சாக்கடை கழிவுநீர் மேன்ஹோல்கள் வழியாக பீறிட்டு கட்டுக்கடங்காமல் ரோட்டில் ஆர்பரிக்கும் நிலை தொடர்கிறது. அந்த வகையில் திண்டுக்கல் - தாடிக்கொம்பு ரோட்டிலும் கழிவு நீர் ஆறாய் ஓடுகிறது. வாகனங்களில் செல்வோர்களின் வேகத்தால் இந்த கழிவு நீர் துாரலாக சிதறி அடிப்பதால் பாதசாரிகள் பாடு பரிதாபமாக உள்ளது. தைபூச திருவிழாவையொட்டி விரதமிருந்து காலில் செருப்பு கூட அணியாமல் செல்லும் பாதயாத்திரை பக்தர்கள் ரோட்டில் தாண்டவமாடும் இந்த கழிவுநீர் ஆர்ப்பரிப்பால் பாதிப்படைந்து நோய் தொற்றுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்றுதான் அந்த வழியாக செல்லும் மாணவர்கள் உட்பட பொது மக்களும் பாதிப்பினை சந்திக்கின்றனர்.
.........
பொதுமக்கள் ஒத்துழைப்பும் தேவை
பொங்கல் விழாவையொட்டி கரும்பு சக்கைகள் போன்ற குப்பை அதிகம் சேரும் நிலை உள்ளது. இதை பொதுமக்கள் பொறுப்பின்றி சாக்கடைகளில் வீசாமல் அதற்குரிய இடங்களில் கொட்டினால் கழிவுநீர் பாதையில் அடைப்புகள் ஏற்படாமல் இருக்கும் என்பதே நிலவரம். பாதிக்கப்பட்ட பகுதிகள் உடனடியாக பணியாளர்கள் கொண்டு சீரமைக்கப்படும்.
சுப்ரமணியன், மாநகராட்சி செயற்பொறியாளர், திண்டுக்கல்.
___________________