/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாணார்பட்டியில் காதல் ஜோடி தஞ்சம்
/
சாணார்பட்டியில் காதல் ஜோடி தஞ்சம்
ADDED : ஜூன் 25, 2025 01:01 AM
சாணார்பட்டி : -பெற்றோர்கள் எதிர்ப்பால் சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
நத்தம் பாப்பாபட்டியை சேர்ந்தவர் பழனியாண்டியின் மகன் சரவணன் 30. இவர் நத்தம் பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளராக எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். உறவினரை சந்திக்க அடிக்கடி சிவகங்கை சென்றபோது அப்பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் மகள் ரித்திகா 20, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
ஓராண்டாக் காதலித்து வந்தநிலையில் ரித்திகாவின் காதல் விஷயம் அவரது பெற்றோருக்கு தெரிந்தததால் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தனர்.இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியே வந்து நத்தம் பெரிய பிள்ளையார் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு வேண்டி தஞ்சம் அடைந்தனர். போலீசார் இரு வீட்டாரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர்.