/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலில் ரோட்டோர ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவக்கம்
/
கொடைக்கானலில் ரோட்டோர ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவக்கம்
கொடைக்கானலில் ரோட்டோர ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவக்கம்
கொடைக்கானலில் ரோட்டோர ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவக்கம்
ADDED : செப் 26, 2024 02:53 AM

கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல் மற்றும் தலைமை செயலகம் உத்தரவால் வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் ஏரிச்சாலை சந்திப்பு வரையுள்ள ரோட்டோர ஆக்கிரப்புகளை அகற்றும் பணி நேற்று துவங்கியது. வருவாய், நெடுஞ்சாலை, நகராட்சி, நீர்வளத்துறையினர் இணைந்து இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
கொடைக்கானலில் ஒரு வாரத்திற்கு முன்பே ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து நெடுஞ்சாலைத்துறையினர் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பு செய்தனர். ஆக்கிரமிப்பாளர்கள் தானாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிய போதும் நெடுஞ்சாலைத்துறையினர் அளவீடு செய்து ரோட்டோரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். தொடர்ச்சியாக துறை ரீதியாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ஆர்.டி.ஓ., சிவராம் கூறியதாவது: முதற்கட்டமாக நெடுஞ்சாலை ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது. இப்பணிகள் தொடர்ந்து நடைபெறும். நிரந்தர கட்டுமானங்கள் ஏற்படுத்தியுள்ளவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். நீதிமன்ற வழிகாட்டுதல்படி ஆக்கிரமிப்புகள் பாரபட்சம் இன்றி அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யப்படுகிறது. இப்பணி முடிவற்ற பின் நெரிசலை கட்டுப்படுத்தும் யுத்திகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு ரோடு விரிவாக்க பணி நடக்கும் என்றார்.