/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் 8 மாதத்தில் விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.50 லட்சம்
/
திண்டுக்கல்லில் 8 மாதத்தில் விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.50 லட்சம்
திண்டுக்கல்லில் 8 மாதத்தில் விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.50 லட்சம்
திண்டுக்கல்லில் 8 மாதத்தில் விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.50 லட்சம்
ADDED : மார் 23, 2025 03:46 AM

திண்டுக்கல் : ''திண்டுக்கல் மாவட்டத்தில் வனத்துறை சார்பில் 8 மாதத்தில் விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது''என திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் தெரிவித்தார்.
வன விலங்குகள் அதிகமாக வேட்டையாடப்படுகிறதே...
வன விலங்குகள் வேட்டையாடுவதை தடுக்க வனபாதுகாப்பு படை உதவி பாதுகாவலர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கன்னிவாடி, ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு பகுதிகளில் வேட்டை தடுப்பு பணியாளர்களை இரவு ரோந்து பணியில் ஈடுபடுத்துகிறோம். மக்களிடமும் விழிப்புணர்வும் ஏற்படுத்துகிறோம்.
சிறுமலை பூங்கா திறப்பது எப்போது...
சிறுமலையில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக தயாராகி வரும் பல்லுாயிர் பூங்காவில் 90 சதவீதம் பணிகள் முடிந்தது. நிதி தேவைப்படுவதால் உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
மரக்கன்றுகள் வழங்கப்படுகிறதா...
வனத்துறை சார்பில் மரக்கன்றுகளை நாங்களே பராமரித்து விவசாயிகள், மக்களுக்கு வழங்குகிறோம். அதுமட்டுமின்றி மழை அளவை அதிகரிக்கும் வகையில் காப்பு காடுகள் பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கிறோம்.
வனவிலங்குகள் கண்காணிக்கப்படுகிறதா...
அடர்ந்த காடுகளில் இருக்கும் சிறுத்தைகள் மக்கள் நடமாடும் பகுதிகளுக்கு வருவதில்லை. அதற்கு தேவையான பொருட்கள் எல்லாம் அங்கேயே உள்ளது. கிராமத்திற்குள் வனவிலங்குகள் வராமல் தடுக்க அதற்கு தேவையான உணவு பொருட்களான புல் வகைகளை காடுகளில் பயிரிட்டுள்ளோம்.
யானைகள் அடிக்கடி விவசாய நிலங்களை சேதப்படுத்துகிறதே...
ஆயக்குடி, கன்னிவாடி பகுதிகளில் யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்துகிறது. அவைகளை கண்காணிக்க , கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
வனப்பகுதி தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பபடுகிறதா...
வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை முழுமையாக சுத்தம் செய்து 10 நாளுக்கு ஒருமுறை தண்ணீர் நிரப்பபடுகிறது. இதை வன விலங்குகள் குடிக்கிறது. இதை கண்காணிக்கவும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகளுக்கான இழப்பீடுகள் முறையாக போய் சேருகிறதா...
திண்டுக்கல் மாவட்டத்தில் 8 மாதத்தில் விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ரூ.30 லட்சம் வழங்க வேண்டியுள்ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு தெரியப்படுத்தியுள்ளோம். அதுவும் விரைவில் வழங்கப்படும்.
தேவாங்குகள் இனம் அழிந்து வருகிறதே...
அய்யலுார், கடவூர், சுக்காம்பட்டியில் தேவாங்கு இனங்களை பாதுகாப்பதற்காக தேவாங்குகள் சரணாலயம் அமைக்கும் பணிகள் நடக்கிறது. இந்தாண்டுக்குள் பணிகள் முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.