/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானல் பெண்களிடம் அரசு வேலை தருவதாக ரூ.6.80 லட்சம் மோசடி: அரசு செவிலியர்கள் உட்பட மூவர் மீது வழக்கு
/
கொடைக்கானல் பெண்களிடம் அரசு வேலை தருவதாக ரூ.6.80 லட்சம் மோசடி: அரசு செவிலியர்கள் உட்பட மூவர் மீது வழக்கு
கொடைக்கானல் பெண்களிடம் அரசு வேலை தருவதாக ரூ.6.80 லட்சம் மோசடி: அரசு செவிலியர்கள் உட்பட மூவர் மீது வழக்கு
கொடைக்கானல் பெண்களிடம் அரசு வேலை தருவதாக ரூ.6.80 லட்சம் மோசடி: அரசு செவிலியர்கள் உட்பட மூவர் மீது வழக்கு
ADDED : நவ 04, 2024 07:48 PM

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பட்டதாரி பெண்களுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.6.80 லட்சம் மோசடி செய்த அரசு
செவிலியர் உட்பட மூவர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை துவக்கியுள்ளனர்.
கொடைக்கானலை சேர்ந்தவர் அர்ச்சனா 35. இவர் பி.ஏ.,பி.எட். படித்து விட்டு அரசு வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். திருமணம் முடிந்த இவர் கர்ப்பகாலத்தில் கொடைக்கானல் இ.எஸ்.ஐ.,மருத்துவமனைக்கு அடிக்கடி சிகிச்சைக்காக சென்றார். அப்போது
அங்குள்ள செவிலியர் கொடைக்கானலை சேர்ந்த முத்துலட்சுமி,என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
முத்துலட்சுமி,தன்னிடம் பணம் கொடுத்தால் திண்டுக்கல் இ.எஸ்.ஐ.,மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் ஆரோக்கியசாந்திமேரி,சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் மூலமாக அரசு வேலை வாங்கி தருவதாக அர்ச்சனாவிடம் ஆசை வார்த்தை கூறினார்.
இதை நம்பியஅர்ச்சனாவும்,முத்துலட்சுமியிடம் ஆன்லைன் மூலமாக ரூ.1.50 லட்சத்தை கொடுத்தார். இதேபோல் செவிலியர் முத்துலட்சுமி
கொடைக்கானலை சேர்ந்த பாண்டீஸ்வரியிடம் ரூ.3 லட்சம்,பிரியதர்ஷினியிடம் ரூ.1.30 லட்சம் என மொத்தமாக மூவரிடமும் ரூ.6.80லட்சம் பெற்றார். பணத்தை பெற்று கொண்ட முத்துலட்சுமி, நீண்ட நாட்களாக எந்த பதிலும் தெரிவிக்காமல் வேலைக்கான
ஆவணங்களையும் வழங்காமல் இருந்தார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அர்ச்சனா,கொடைக்கானல் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
விசாரித்த நீதிபதி திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி இன்ஸ்பெக்டர்முத்துலட்சுமி,எஸ்.ஐ.,கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
விசாரணையில் ஆரோக்கிய சாந்திமேரி, ரவிச்சந்திரன் இருவரும் ஏற்கனவே இதேபோல் அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள்
மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. புதிதாக இவர்களுடன் முத்துலட்சுமி,என்ற பெண்ணும் சேர்ந்துள்ளார்.
விரைவில்மூவரும் கைது செய்யப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.