UPDATED : அக் 15, 2026 10:20 PM
ADDED : அக் 15, 2026 10:18 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் திண்டுக்கல் கோட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டுக்கல் தலைமை தபால்துறை தலைமை கண்காணிப்பாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க கோட்டத் தலைவர் கருப்பையா தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஊதியக்குழு அமைக்க வேண்டும். மேளா, ஆய்வுக்கூட்டம், பயிற்சியில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு பயணப்படி வழங்க வேண்டும். ஆதார் பயிற்சி வழங்குவதை நிறுத்த வேண்டும், அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
திண்டுக்கல் கோட்டச் செயலாளர் ஜான்சிராணி, கோட்ட முன்னாள் தலைவர் பெருமாள் ஆகியோர் பேசினர். உறுப்பினர்கள் முருகன், தனபாலன், சண்முகவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
