/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி கோயிலில் ரஷ்ய பக்தர்கள் தரிசனம்
/
பழநி கோயிலில் ரஷ்ய பக்தர்கள் தரிசனம்
ADDED : நவ 27, 2024 04:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி முருகன் கோயிலில் ரஷ்யாவை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து பித்தளை வேலை காணிக்கையாக செலுத்தினர்.
ரஷ்யாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பக்தர்கள் வருகை புரிந்தனர். படிப்பாதை மூலம் மலைக்கோயில் சென்ற இவர்கள் ஐந்து அடி பித்தளை வேலை கோயிலில் காணிக்கையாக செலுத்தினர். தமிழகத்தில் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் தரிசனம் செய்த பின் பழநி கோயிலில் தரிசனம் செய்தனர். சுவாமி தரிசனம் முடிந்த பிறகு வின்ச் மூலம் கீழே இறங்கி கரூர் சென்றனர்.