/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கசவனம்பட்டியில் குரு பூஜை குவிந்த வெளிமாநில சாதுக்கள்
/
கசவனம்பட்டியில் குரு பூஜை குவிந்த வெளிமாநில சாதுக்கள்
கசவனம்பட்டியில் குரு பூஜை குவிந்த வெளிமாநில சாதுக்கள்
கசவனம்பட்டியில் குரு பூஜை குவிந்த வெளிமாநில சாதுக்கள்
ADDED : நவ 06, 2024 06:58 AM

கன்னிவாடி : கன்னடிவாடி அருகே கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில் குரு பூஜை விழாவில் வெளிமாநில சாதுக்கள் பங்கேற்றனர்
மவுனகுரு சுவாமியின் சமாதி தினமான ஐப்பசி மூலம் நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் குருபூஜை நடக்கிறது. இந்தாண்டு நேற்று நடந்த குரு பூஜையையொட்டி பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்தனர்.
சிவனுாரணி, திருமலைக்கேணி, திருமூர்த்தி, சுருளி, காசி, சதுரகிரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. நவ., 4ல் தீர்த்தாபிஷேகத்துடன் குரு பூஜை துவங்கியது.
நேற்று அதிகாலை உலக நன்மைக்காக மகா யாகம் நடந்தது. 1008 படி பாலாபிஷேகம், திரவிய அபிஷேகத்துடன் பழங்கள், மலர்களால் கோயில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
தேவார பாராயணம், திருவாசக முற்றோதலுடன் பூஜை, அன்னதானம் நடந்தது.
மும்பை, காசி, பத்ரிநாத் பகுதிகளிலிருந்து பங்கேற்ற சாதுக்களுக்கு வஸ்திர, சொர்ண தானம் நடந்தது.
உயர்நீதிமன்ற நீதிபதி முரளிசங்கர், எம்.எல்.ஏ., செந்தில்குமார், ஓய்வு அரசு அதிகாரி பேச்சியம்மாள் பங்கேற்றனர்.