/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தற்கொலை செய்தவர்கள் சேலம் தம்பதி
/
தற்கொலை செய்தவர்கள் சேலம் தம்பதி
ADDED : பிப் 20, 2025 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்:கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி கம்பி பாலம் அருகே பிப்.13ல் வனத்துறை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரோட்டோரம் உள்ள வனப்பகுதியில் இருவர் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். அருகில் விஷ மருந்து பாட்டில் இருந்தது. வனத்துறையினர் கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவித்து இருவரது உடலையும் மீட்டனர்.
விசாரணையில் இறந்தவர்கள் சேலம் குன்னத்துாரை சேர்ந்த பழனிச்சாமி 55, மனைவி மலர் 50, என்பது தெரிய வந்தது. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். குடும்ப பிரச்னையால் மனமுடைந்து இம்முடிவு எடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

