/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அரிசி டீலர் என 4 பேரிடம் ரூ.7.20 லட்சம் மோசடி சேலம் நபர் கைது
/
அரிசி டீலர் என 4 பேரிடம் ரூ.7.20 லட்சம் மோசடி சேலம் நபர் கைது
அரிசி டீலர் என 4 பேரிடம் ரூ.7.20 லட்சம் மோசடி சேலம் நபர் கைது
அரிசி டீலர் என 4 பேரிடம் ரூ.7.20 லட்சம் மோசடி சேலம் நபர் கைது
PUBLISHED ON : அக் 18, 2025 12:00 AM
திண்டுக்கல்: அரிசி டீலர் எனக்கூறி திண்டுக்கல் மாவட்ட வியாபாரிகள் 4 பேரிடம் ரூ.7.20 லட்சம் மோசடி செய்த சேலத்தைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் அடியனுாத்து பகுதியைச் சேர்ந்தவர் முகமது இலியாஸ் 42. வேடசந்துாரில் அரிசி கடை வைத்துள்ளார். இவரிடம் சில மாதங்களுக்கு முன் ஒரு நிறுவனத்தின் டீலர் என அறிமுகமாகிய நபர் தொடர்பு கொண்டார். முன்பணம் கொடுத்தால் குறைந்த விலைக்கு பாசுமதி அரிசி தருவதாகவும் அந்த நபர் கூறினார். அதை நம்பிய முகமது இலியாஸ் ரூ.3 லட்சத்து 8 ஆயிரத்தை வங்கி கணக்கு மூலம் அவருக்கு அனுப்பினார். ஆனால் அந்த நபர் பேசியபடி அரிசியை அனுப்பவில்லை.
இது தொடர்பாக கேட்க அவரது அலைபேசி எண்ணை தொடர்பு கொண்ட போது முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முகமதுஇலியாஸ் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். மேலும் நிலக்கோட்டை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த மேலும் 3 வியாபாரிகள் ஏமாற்றப்பட்டதும் தெரிந்தது. நான்கு பேரிடமும் ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது குறித்து இன்ஸ்பெக்டர் விக்டோரியா லுார்துமேரி தலைமையில் தனிப்படையினர் விசாரித்தனர். விசாரணையில் சேலம் சாமிநாதபுரத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் 49, மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.