நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி : அமலிநகர் அமல அன்னை அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. பள்ளி நிர்வாகி பாதிரியார் மைக்கேல் சகாயராஜ் தலைமை வகித்தார். பஞ்சம்பட்டி மறை மாவட்ட அதிபர் பெர்னாட்ஷா, திண்டுக்கல் மறை மாவட்ட ஆவண காப்பாளர் ஜான்பீட்டர் முன்னிலை வகித்தனர்.
ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் எட்வர்ட் பிரேம்குமாருக்கு நினைவு பரிசு வழங்கினர். பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை உதவி ஆசிரியை மரிய பிரின்சி குழுவினர் செய்திருந்தனர்.

