தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பள்ளிக்கல்வித்துறை திட்டங்களில் தொய்வு

உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பள்ளிக்கல்வித்துறை திட்டங்களில் தொய்வு

உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பள்ளிக்கல்வித்துறை திட்டங்களில் தொய்வு


UPDATED : நவ 04, 2026 11:05 AM

ADDED : நவ 04, 2026 11:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 11:05 AM ADDED : நவ 04, 2026 11:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர் பணியிடங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில் மாணவர் நலன் சார்ந்த பள்ளிக்கல்வித்துறையின் சிறப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்தும் நோக்கில் ‘லெவல் அப்’ திட்டம்துவங்கப்பட்டது.

இந்த திட்டத்தில் மாணவர்கள் ஆங்கிலத்தில் எளிதாகப் படிக்கவும், எழுதவும், சரளமாகப் பேசுவதற்கும் தனிப்பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 10,500-க்கும் மேற்பட்டபட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையவழி சிறப்புப் பயிற்சிகள், டிஜிட்டல் கற்பித்தல் கையேடுகள் வழங்கப்பட்டன.

அதேபோல் துவக்கப் பள்ளி மாணவர்களுக்காக அறக்கட்டளைகளுடன் இணைந்து ‘மகிழ்வுறு ஆங்கிலம்’ டிஜிட்டல் தொழில்நுட்பத் திட்டம் சோதனைமுறையில் துவங்கப்பட்டு, படிப்படியாக நடுநிலைப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விளையாட்டு,டேப்லெட் அடிப்படையிலான டிஜிட்டல் கற்றல் வழிமுறைகள் மூலம் மாணவர்களின் ஆங்கில பேச்சுத்திறன் வளர்க்கப்படுகிறது.

இந்த சிறப்புத் திட்டங்களின் நோக்கம் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் கள அளவில் இவற்றை செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆங்கில ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர் இல்லாத பள்ளிகளில்மற்ற பாட ஆசிரியர்கள் அல்லது தற்காலிக ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வித்திட்ட ஆசிரியர்கள் இத்திட்டத்தை கையாள வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் இத்திட்டம் நிர்ணயிக்கப்பட்ட தரத்தை எட்டுவதில் தொய்வு ஏற்படுகிறது.

ஏற்கனவே ‘எண்ணும் எழுத்தும்’, ‘நான் முதல்வன்’, ‘கலைத் திருவிழா’ போன்ற பல கல்வி சாராபணிகள், தரவு பதிவேற்ற பணிகள் இருக்கும் சூழலில் இது ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமையை உருவாக்குகிறது என ஆசிரியர் சங்கங்கள் கவலை தெரிவித்துள்ளன.

மகிழ்வுறு ஆங்கிலம், லெவல் அப் ஆகிய திட்டங்கள் ஒலியியல், டிஜிட்டல் வழிக் கற்றல் முறையை சார்ந்தவை. ஆனால் கிராமப் பள்ளிகளில் ஸ்மார்ட் ஒலிபெருக்கிகள், ஸ்மார்ட் போர்டுகள், தடையற்ற இணைய வசதி போதுமானதாக இல்லை.

இத்திட்டங்கள் தொலைநோக்கு முயற்சி யுடன் துவங்கப்பட்டாலும் நுாறு சதவீதம் முழு பலன் கிடைப்பதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us