UPDATED : நவ 04, 2026 10:53 AM
ADDED : நவ 04, 2026 10:49 AM
அ நிறம் | அளவு
பழநி: கோவை மாவட்டம் அன்னுார் பகுதியை சேர்ந்த தம்பதி ஜோதிராஜ், ஜெயப்பிரியா, நேற்று பழநி முருகன் கோயிலுக்கு வந்தனர்.
பாதவிநாயகர் கோயிலில் தரிசனம் செய்த பின் படிப்பாதை வழியாக முருகன் கோயிலுக்கு சென்றனர். அப்போது ஜோதிராஜ் அணிந்து இருந்த இரண்டு பவுன் தங்கச்செயின் காணாமல் போனது தெரிந்தது. உடனே பழநி அடிவாரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க சென்றனர்.
இதற்கிடையில் ஊர்க்காவல் படையை சேர்ந்த பாபு, பழனிச்சாமி ஆகியோர் கிரிவீதியில் கிடந்த அந்த செயினை மீட்டு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். தம்பதியிடம் விவரங்களை கேட்டு சரிபார்த்த இன்ஸ்பெக்டர் கவிதா, அவர்களிடம் செயினை ஒப்படைத்தார். நேர்மையாக செயல்பட்ட ஊர்க்காவல் படையினரை எஸ்.பி., ஜெயக்குமார் பாராட்டினார்.
