பள்ளி அருகே திறந்தவெளி கிணறு கம்பிவேலி அமைக்க கோரிக்கை
பள்ளி அருகே திறந்தவெளி கிணறு கம்பிவேலி அமைக்க கோரிக்கை
UPDATED : அக் 16, 2026 12:38 AM
ADDED : அக் 16, 2026 12:36 AM

வேடசந்துார்: கல்வார்பட்டி வெள்ளையம்பட்டி பள்ளி அருகே உள்ள திறந்தவெளி கிணற்றுக்கு கம்பிவலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்வார்பட்டி ஊராட்சி வெள்ளையம்பட்டி ஏ.டி.,காலனியில் அரசு துவக்கப் பள்ளி உள்ளது. இங்கு 25 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு இடதுபுறம் 500 அடி துாரத்தில் ஊருக்கு பொதுவான, பயன்பாடற்ற 100 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. இக்கிணற்றின் சுற்றுச்சுவர் இரண்டரை அடி உயரம் மட்டுமே உள்ளது.
இந்நிலையில் மாணவர்கள் இடைவேளை நேரங்களில் கிணற்றுக்கு அருகே செல்வதும், கிணற்றில் தண்ணீர் உள்ளதால் கல்லை போட்டு விளையாடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் அசம்பாவிதம் நிகழும் வாய்ப்பு உள்ளதால் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர்.
மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி இக்கிணற்றின் மேற்பகுதியில் கம்பிவலை அமைக்க ஊராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.
