/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கடன் வாங்கி திரும்ப தராததால் பள்ளி தலைமை ஆசிரியருக்கு சிறை
/
கடன் வாங்கி திரும்ப தராததால் பள்ளி தலைமை ஆசிரியருக்கு சிறை
கடன் வாங்கி திரும்ப தராததால் பள்ளி தலைமை ஆசிரியருக்கு சிறை
கடன் வாங்கி திரும்ப தராததால் பள்ளி தலைமை ஆசிரியருக்கு சிறை
ADDED : செப் 10, 2024 05:15 PM

திண்டுக்கல்: உறவினரிடம் வாங்கிய கடனை திருப்பி தராத அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு அங்குநகரை சேர்ந்த முதியவர் பாண்டி, 69. இவரிடம் 2021ல் உறவினரான நிலக்கோட்டை அணைப்பட்டி அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் மாலா, 56, என்பவர் கடனாக ரூ.4 லட்சம் வாங்கினார். பாண்டி, சில மாதங்கள் கழித்து தன்னிடம் வாங்கிய கடனை, மாலாவிடம் திரும்ப கேட்டார். மாலாவும், முறையாக பதிலளிக்காமல் இழுத்தடித்தார்.
இதனால் பாண்டி, திண்டுக்கல் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கறிஞராக ஸ்ரீ நித்யா ஆஜராகி வாதாடினார். இவ்வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி பிரியா, கடன் வாங்கி திரும்ப தராத மாலாவுக்கு, 1 ஆண்டு சிறை தண்டனை, நஷ்ட ஈடாக ரூ.4 லட்சமும் வழங்க உத்தரவிட்டார்.