/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
/
பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : டிச 20, 2024 03:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: ஆசிரியர்களுக்கு நீண்ட நாட்களாக வழங்க வேண்டிய பண பலன்களை விரைவில் வழங்க கோரியும், ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக தீர்க்க வலியுறுத்தியும் நத்தம் வட்டார கல்வி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்டார கல்வி அலுவலரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மாவட்ட செயலாளர் முருகன், வட்டார தலைவர் ஜான்ஸ்டீபன், செயலாளர் ஜெரோன்பாபு உட்பட 50 -க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.