/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கால்வாயில் விழுந்தவர் மாயம் 3 நாளாக தொடரும் தேடும் பணி
/
கால்வாயில் விழுந்தவர் மாயம் 3 நாளாக தொடரும் தேடும் பணி
கால்வாயில் விழுந்தவர் மாயம் 3 நாளாக தொடரும் தேடும் பணி
கால்வாயில் விழுந்தவர் மாயம் 3 நாளாக தொடரும் தேடும் பணி
ADDED : ஆக 07, 2025 07:11 AM

நிலக்கோட்டை : திருப்பூரை சேர்ந்தவர் தினேஷ் வயது 23. நிலக்கோட்டை அருகே உள்ள எத்திலோட்டில் உள்ள தனது மாமா சிவப்பிரகாஷ் வீட்டிற்கு ஆடிப்பெருக்கு குலதெய்வ சுவாமி கும்பிட வந்தார். நேற்று முன்தினம் முல்லை பெரியாறு பாசன கால்வாயில் குளித்தார்.
கால்வாயில் சென்ற தண்ணீரின் வேகத்தில் சிக்கி தினேஷ் இழுத்து செல்லப்பட்டார்.
வருவாய் துறையினர் முல்லைப் பெரியாறு கால்வாயில் நீரை நிறுத்த வைகை அணை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
தண்ணீர் நிறுத்தப்பட்டும் தினேஷின் உடலை நேற்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. விளாம்பட்டி போலீசார் நிலக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் தினேஷின் உடலை இன்றும் 3 வது நாளாக தேடுகின்றனர்.