/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
என்.பஞ்சம்பட்டியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரம்
/
என்.பஞ்சம்பட்டியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரம்
என்.பஞ்சம்பட்டியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரம்
என்.பஞ்சம்பட்டியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரம்
ADDED : நவ 03, 2025 04:28 AM
சின்னாளபட்டி: என் பஞ்சம்பட்டியில் கோயில் திருவிழாவிற்கான அன்னதான இடம் குறித்த பிரச்னையில், போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு மும்முரம் அடைந் துள்ளது.
இங்குள்ள காளியம்மன் கோயில் கும்பாபிஷேக அன்னதானத்திற்காக, ஒரு தரப்பினர் மதுரை ஐகோர்ட் கிளையில் அனுமதி பெற்றிருந்தனர். நேற்று முன்தினம் கும்பாபிஷேக ஏற்பாடுகள் துவங்கிய நிலையில், கிராமத்தின் மையத்தில் உள்ள மைதானத்தை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் இங்குள்ள தேவாலயத்தில் கூடினர்.
கருப்பு பேட்ஜ் அணிந்து, கொடி, ஏற்றி சர்ச் வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் துவக்கினர். ஆத்தூர் தாசில்தார் முத்து முருகன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படவில்லை. நேற்று 3வது நாள் காத்திருப்பு போராட்டம் தொடரும் நிலையில், நேற்று கும்பாபிஷேகம், அன்னதானம் நடத்த யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
இச்சூழலில் பாதுகாப்பிற்காக, கூடுதல் போலீசார், தீயணைப்பு வாகனங்கள், பேரிகார்டு தடுப்புகள் என, பாதுகாப்பு பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. -

