/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கலெக்டர் அலுவலக பொருட்கள் ஜப்தி; பேச்சுவார்த்தையால் அவகாசம்
/
கலெக்டர் அலுவலக பொருட்கள் ஜப்தி; பேச்சுவார்த்தையால் அவகாசம்
கலெக்டர் அலுவலக பொருட்கள் ஜப்தி; பேச்சுவார்த்தையால் அவகாசம்
கலெக்டர் அலுவலக பொருட்கள் ஜப்தி; பேச்சுவார்த்தையால் அவகாசம்
ADDED : அக் 16, 2024 08:00 AM
திண்டுக்கல் : நிலம் கையப்படுத்தப்பட்ட வழக்கில் உரிய இழப்பீடு வழங்காமல் இழுத்தடித்ததால் திண்டுக்கல் கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்றம் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் இதன் நடவடிக்கை 1 மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் கோவிந்தாபுரம் துரைராஜ்நகரை சேர்ந்த குமாரசாமி மனைவி கோமதியம்மாள் 76.
இவரது நிலம் 1988ல் திண்டுக்கல்-கரூர் ரயில் பாதை திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்டது. இதற்காக நிர்ணயிக்கப்பட்ட இழப்பீடு தொகை குறைவாக இருந்ததால் கூடுதல் தொகை கேட்டு திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிமன்றம் ரயில்வேயிடம் ரூ.2 லட்சத்து 59 ஆயிரத்து 85-ஐ வருவாய்த்துறையினர் பெற்று கோமதியம்மாளுக்கு வழங்க உத்தரவிட்டது.
ரூ.41,739 மட்டுமே வழங்க கோமதியம்மாள் நிறைவேற்றுதல் மனு செய்தார்.இதைதொடர்ந்து திண்டுக்கல் கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ய முயன்றபோது அதிகாரிகள் இழப்பீடு தொகையை பெற்றுத் தருவதாக உறுதிஅளிக்க ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது. அதன் பின்னரும் இழப்பீடு தொகை வழங்கவில்லை.
இதுதொடர்பாக மீண்டும் மனு செய்ய, கலெக்டர் அலுவலகத்தில் 10 கணினிகள், 2 தட்டச்சு இயந்திரங்கள், 100 மேஜைகள், 20 நாற்காலிகள், 50 மின் விசிறிகளை ஜப்தி செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.அதன்பேரில் ஊழியர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். இதையறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ரயில்வேயிடம் இழப்பீடு தொகை பெற்று தருவதற்கு ஒரு மாதம் அவகாசம் கேட்டனர். இதனால் ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.