நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : புலியூர் - நத்தம் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் உடன் ஒட்டன்சத்திரம் கப்பிலியப்பட்டி மதுரைவீரன் 40, 2009ல் டூவீலரில் சென்றனர்.
எதிரே வந்த அரசு பஸ் மோதியதில் மதுரை வீரன் இறந்தார்.
இது குறித்த வழக்கு பழநி நீதிமன்றத்தில் நடைபெற்றது. இழப்பீடாக வட்டியுடன் சேர்த்து ரூ.20,74,000 வழங்க உத்தரவிடப்பட்டது.
இதனை வழங்காமல் காலம் தாழ்த்தியதால் பழநி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இழப்பீடு வழங்காத அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிமன்ற உத்தரவிட்டது. அதன்படி அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

