/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு பள்ளி மாணவியருக்கு தற்காப்பு பயிற்சி * கீ செயின், துப்பட்டா, பேனா, பென்சில் பயன்படுத்த அறிவுறுத்தல்

ADDED : ஜூலை 28, 2025 05:20 AM
செம்பட்டி : மாணவியர் அன்றாடம் பயன்படுத்தும் கீ செயின், துப்பட்டா, பேனா, பென்சில் போன்ற பொருட்களைக் கொண்டு தற்காப்பு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவியருக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக வட்டார வாரியாக நடுநிலை, உயர், மேல்நிலைப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ, சிலம்ப பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
பயிற்சி பெறும் மாணவியர், பயிற்சியாளர் குறித்த விவரங்களை எமிஸ் இணையத்தில் பதிவேற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஏதேனும் 2 நாட்கள் வீதம் 3 மாதங்களுக்கு 24 பயிற்சி வகுப்புகள் நடத்தவும், 6 முதல் 10ம் வகுப்பு மாணவியருக்கு குறைந்தபட்சம் 10 முதல் அதிகபட்சமாக 100 மாணவியரை கொண்ட குழுக்களாக பிரித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தற்காப்பு கலை கற்பிக்கப்படும். இதில் கீ செயின், துப்பட்டா, மப்ளர், புத்தகப்பை, பேனா, பென்சில், புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை கருவிகளாக கொண்டு ஆபத்து காலங்களில் தற்காத்துக் கொள்ளும் பயிற்சிகள் கற்பிக்கப்பட உள்ளது.