தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கருத்தரங்கம்

கருத்தரங்கம்

கருத்தரங்கம்


ADDED : நவ 04, 2026 03:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2026 03:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலையின் தமிழ்த்துறை சார்பில் 21ம் நூற்றாண்டில் தமிழ் இலக்கிய போக்குகள் குறித்த கருத்தரங்கம் நடந்தது. துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்து பேசுகையில், ‘தமிழ் இலக்கியத்தின் சமகால போக்குகளை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். கருத்தரங்குகள், விழாக்கள் பல்வேறு புதிய தகவல்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும்’ என்றார்.

சாகித்ய அகாடமி தமிழ் ஆலோசனை குழு ஒருங்கிணைப்பாளர் அறவேந்தன் பேசுகையில், ‘21ம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியங்களை பொறுத்தவரை சமூக ஊடகங்களின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. அதனை முக்கிய கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்றார்.

பல்கலை பதிவாளர் மாரிமுத்து, பாரதிதாசன் பல்கலை தமிழ்த்துறை தலைவர் அலிபாபா, எழுத்தாளர் வேணுகோபால், காந்திகிராம பேராசிரியர் ஆனந்தகுமார், உதவி பேராசிரியர் செல்வகுமார் உள்ளிட்டோர் பேசினர். உதவி பேராசிரியர் ஜோஸ்பின் செல்வி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us