/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு வேலை வாங்கித்தருவதாக பண மோசடியில் ஈடுபட்டவரை காரில் கடத்திய ஏழு பேர் கைது
/
அரசு வேலை வாங்கித்தருவதாக பண மோசடியில் ஈடுபட்டவரை காரில் கடத்திய ஏழு பேர் கைது
அரசு வேலை வாங்கித்தருவதாக பண மோசடியில் ஈடுபட்டவரை காரில் கடத்திய ஏழு பேர் கைது
அரசு வேலை வாங்கித்தருவதாக பண மோசடியில் ஈடுபட்டவரை காரில் கடத்திய ஏழு பேர் கைது
ADDED : ஜூன் 22, 2025 09:15 PM

சாணார்பட்டி:கோபால்பட்டி அருகே அரசு வேலை வாங்கி தருவதாகக்கூறி பண மோசடியில் ஈடுபட்டவரை கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கே.அய்யாபட்டியை அடுத்த சின்னகோம்பைபட்டியை சேர்ந்தவர் முருகன் 41. இவரை மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்று விட்டதாகவும், விடுவிக்க ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டுவதாக கூறி மனைவி பாண்டீஸ்வரி சாணார்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தார்.
விசாரணையில் முருகன் மதுரை மாவட்டம் கோவில்பாப்பாக்குடியை சேர்ந்த குமார் 50,என்பவரிடம் சில மாதங்களுக்கு முன் அறிமுகமாகியுள்ளார். பின் அவரது மனைவி மற்றும் தங்கைக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 7.50 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால் கூறியபடி முருகன் அரசு வேலையும் வாங்கித் தரவில்லை பணத்தையும் திருப்பி தராததால் ஆத்திரமடைந்த குமார், 2 நாட்களுக்கு முன் சாணார்பட்டி அருகே உள்ள மேட்டுகடையில் வைத்து முருகனை காரில் கடத்திச் சென்று கடுமையாக தாக்கினார். முருகனின் மனைவிக்கு போன் செய்து ரூ. 10 லட்சத்தை கொடுத்து முருகனை மீட்டுச் செல்லுமாறு கூறியுள்ளனர்.
ஏழு பேர் கைது
இதனைத் தொடர்ந்து போலீசார் அலைபேசி சிக்னலை வைத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று முருகனை மீட்டனர். மேலும் அவரை கடத்திய கோவில்பாப்பாகுடியைச் சேர்ந்த குமார் 50,சரண் 19, பாண்டி 33, செல்வராஜ் 27, ராஜா 22, சதீஷ் 40, வீரசுந்தர் 28,ஆகிய 7 பேரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. முருகன் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முருகன் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் நத்தம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி சந்திரன் 47, மகள் ரேஷ்மா என்பவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1 லட்சம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியுள்ளார். இதனை அடுத்து முருகனை சாணார்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது முருகனிடம் விசாரணை நடத்தியதில் கன்னியாபுரம், கம்பிளியம்பட்டி, முளையூர், சின்னமுளையூர் மதுக்காரம்பட்டி, வலையபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. பின்னர் ஜாமினில் வந்த முருகன், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரிந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.