ADDED : செப் 21, 2024 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சிறுகுடி- இந்திராநகரை சேர்ந்த பெயிண்டர் விஜயகுமார் 22. திருமணமாகி ஒரு குழந்தை உள்ளநிலையில் விஜயகுமார் வசிக்கும் பகுதியில் நேற்று 54 வயதுடைய உறவுக்கார பெண் உடல்நிலை சரியில்லாமல்
தனது வீட்டிலிருந்தார். அப்போது அந்த வீட்டிற்குள் நுழைந்த விஜயகுமார்,பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றார். பெண் கூச்சலிட இதனால் ஆத்திரமான விஜயகுமார் அப்பெண்ணை தலையில் அடித்து கீழே தள்ளி விட்டு தப்பினார். நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி வழக்கு பதிவு செய்து தலைமறைவான விஜயகுமாரை தேடுகிறார்.