ADDED : செப் 16, 2025 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி திருவள்ளுவர் சாலை பகுதியில் கணேசன் 37, டீக்கடை நடத்தி வருகிறார் .இவர் கடை அருகே விஜயகுமார் டீக்கடை நடத்தி வருகிறார் .
சில நாட்களுக்கு முன்பு இருவர் கடைகளிலும் உள்ள பணப்பெட்டியை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்த கண்காணிப்பு கேமரா வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .வீடியோவில் கல்லாப்பெட்டியை ஸ்க்ரூடிரைவர் உதவியுடன் உடைத்து பணத்தை எடுத்து செல்வது போன்ற வீடியோ வைரலாகிறது. இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.