/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மோசடி தடுக்க யூடியூபர்கள் மூலம் குறும்படங்கள்: சைபர் கிரைம் திட்டம்

ADDED : அக் 11, 2024 07:33 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் இணைய வழி மோசடிகளை தடுக்க யூடியூபர்கள் மூலம் குறும்படங்கள் தயாரித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சைபர்கிரைம் போலீசார் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் படித்த இளைஞர்கள்,வீட்டிலிருக்கும் பெண்களை குறிவைத்து குறைந்த விலையில் வீட்டு உபகரணங்கள்,அரசு வேலை எளிதில் கிடைக்கும்,போலீஸ் பேசுகிறேன்,சி.பி.ஐ.,ல் இருந்து பேசுகிறேன் என அலைபேசியில் மர்ம நபர்கள் தொடர்பு கொள்ள,அவர்கள் கூறும் பொய்யான வாக்குறுதிகளை நம்ப வைத்து லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் சம்பவங்கள் ஏராளமாக நடக்கிறது. இதைத்தடுக்கும் விதமாக திண்டுக்கல் சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி.,தெய்வம் தலைமையிலான போலீசார் யூடியூபர்களை வரவழைத்து அவர்கள் மூலம் இணையவழி குற்றங்களில் சிக்கும் மக்களை தடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு குறும்படங்களை தயாரிக்க அறிவுறுத்தி உள்ளனர். இவர்கள் மூலமாக இன்ஸ்டாகிராம் , முகநுால், யூடியூப்களில் குறும்படங்களை பதிவேற்றம் செய்து அதன்மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.