/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் மருத்துவமனை முன் ஒரே நேரத்தில் இருதரப்பினர் மறியல்
/
திண்டுக்கல் மருத்துவமனை முன் ஒரே நேரத்தில் இருதரப்பினர் மறியல்
திண்டுக்கல் மருத்துவமனை முன் ஒரே நேரத்தில் இருதரப்பினர் மறியல்
திண்டுக்கல் மருத்துவமனை முன் ஒரே நேரத்தில் இருதரப்பினர் மறியல்
ADDED : செப் 20, 2024 05:51 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு இருதரப்பினர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரே நேரத்தில் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
வடமதுரையை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் அதே பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவரோடு ஆட்டோவில் சென்ற போது ஆட்டோ கவிழ்ந்ததில் பிரபாகரன் இறந்தார்.
இவரது உடல் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இவரது உறவினர்கள் பிரபாகரன் இறப்பில் மர்மம் உள்ளதாகவும் குமரேசனை கைது செய்ய கோரி திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு ரோடு மறியலில் ஈடுபட்டனர். வடக்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைக்க முயன்றனர்.
அதற்குள் திண்டுக்கல் ஆர்.வி.எஸ். குளத்துார் பகுதியை சேர்ந்த அபிராமி24, கணவரோடு சேர்த்து வைக்ககோரி தாலுகா போலீசில் புகாரளித்த நிலையில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உறவினர்களும் அபிராமியின் புகார் மீது நடவடிக்கை கோரி மறியலில் ஈடுபட்டனர்.
இருதரப்பினரும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் மறியலில் ஈடுபட்டதால் போலீசாருக்கு பெரும் தலைவலி ஏற்பட்டது.
இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூற மறியல் கைவிடப்பட்டது.