/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போக்குவரத்து வசதி குறைவால் தவிக்கும் சிங்காரக்கோட்டை
/
போக்குவரத்து வசதி குறைவால் தவிக்கும் சிங்காரக்கோட்டை
போக்குவரத்து வசதி குறைவால் தவிக்கும் சிங்காரக்கோட்டை
போக்குவரத்து வசதி குறைவால் தவிக்கும் சிங்காரக்கோட்டை
ADDED : செப் 30, 2025 04:29 AM

வடமதுரை: டவுன் பஸ், மினி பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் சிங்காரக்கோட்டை ஊராட்சி கிராமங்களை சேர்ந்த மக்கள் போக்குவரத்து வசதி குறைவால் தவிக்கின்றனர்.
வடமதுரை ஒன்றியத்தில் சாணார்பட்டி ஒன்றிய எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது சிங்காரக்கோட்டை ஊராட்சி. எஸ்.பாறைப்பட்டி, பெரியரெட்டியபட்டி, துாரிபுரம், இந்திரபுரி, காட்டுப்புதுார், சின்ன ரெட்டியபட்டி, எஸ்.குரும்பபட்டி, நேருஜிநகர், சிங்காரக்கோட்டை, கவுண்டன்பட்டி, காமராஜ்நகர், அகிலாண்டபுரம் கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் உள்ள எஸ்.பாறைப்பட்டிய சேதமடைந்து துாண்கள் பலமிழந்துள்ளது.
பாறைப்பட்டி மந்தையில் தேங்கும் சகதியால் மக்கள் அவதிப்படுகின்றனர். இங்கு சிமென்ட் ரோடு அமைக்க வேண்டும். ஊராட்சி பகுதியை பிற பகுதிகளுடன் இணைக்கும் சின்னரெட்டியபட்டியில் இருந்து காட்டுப்பட்டி, அக்கரைப்பட்டி செல்லும் ரோடுகள் சேதமடைந்து கிடப்பதால் மக்கள் சிரமத்தில் உள்ளனர். சாணார்பட்டி, வடமதுரை ஒன்றிய எல்லைகள் பிரியும் இடத்தில் ரோடு புதுப்பித்தல் பணி ஒரு பக்கம் நடந்தாலும், மற்றொரு பகுதிக்குள் நடப்பதில்லை. இதனால் போக்குவரத்து சிரமம் அதிகம் உள்ளது.
-சேதமான மின் கம்பம் கே.ரவிக்குமார், அ.ம.மு.க., ஒன்றிய செயலாளர், எஸ்.குரும்பபட்டி: இவ்வழியே இயக்கப்பட்ட மினி பஸ் சேவை நின்று போனதால் மக்கள் போக்குவரத்து வசதி குறைவால் அதிக சிரமப்படுகின்றனர். இப்பகுதியில் ஏராளமான மின்கம்பங்கள் சேதமடைந்து ஆபத்தாக உள்ளன. சிங்காரக்கோட்டை குரும்பபட்டி வழி வடமதுரை ரோட்டில் பல இடங்களில் ரோட்டின் குறுக்கே மின்ஒயர்கள் தாழ்வான செல்வதால் விபத்து ஆபத்து உள்ளது. இவற்றை மாற்றி அமைக்க வேண்டும். குரும்பபட்டி மயானத்தில் அடிப்படை வசதிகள் ஏதுமில்லாமல் உள்ளது. ரோடு, மயான கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
- குடியிருப்புக்குள் புகும் மழை நீர் வி.தங்கராஜ், சமூக ஆர்வலர், சிங்காரக்கோட்டை: திண்டுக்கல்லில் இருந்து புகையிலைப்பட்டி வழியே சிங்காரக்கோட்டை வந்து சென்ற தனியார் பஸ் தற்போது வருவதில்லை. சிங்காரக்கோட்டை கோட்டை மேடு பகுதியில் சாக்கடை வடிகால் கட்டமைப்பு இல்லாததால் ரோட்டில் சேகரமாகும் மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்து பாதிப்பு ஏற்படுகிறது. கோட்டை மேடு பகுதியில் உலர்களம் அமைத்து தர வேண்டும். குடிநீர் வினியோகத்தின் போது மேற்கு பகுதிக்கு சப்ளை சீராக இருப்பதில்லை. இதை சரி செய்ய வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளி கூடும் விடும் நேரங்களில் பெரியரெட்டியபட்டி, சின்னரெட்டியபட்டி கிராமங்களை இணைத்து இயக்கப்பட்ட பஸ் சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதை மீண்டும் இயக்க வேண்டும்.
தேவை தடுப்பு சுவர் டி.சக்திவேல், வியாபாரி, எஸ்.பாறைப்பட்டி: இங்குள்ள பாலசமுத்திரம் குளத்தின் மறுகால் நீர் எஸ்.பாறைப்பட்டி வழியே ஓடையாக பயணித்து பொம்மிசெட்டி குளத்தை அடைகிறது. இதன் மேல் பகுதியில் இருக்கும் 10க்கு மேற்பட்ட குளங்களின் நீர் ஒருசேர பயணிக்கும் நிலையில் அதிகபடியான நீர் செல்லும். அந்த வகையில் 2005ல் ஏற்பட்ட நீர்வரத்தால் கிராமத்தின் பாதியளவிற்கு வெள்ள நீரில் சிக்கி தவிக்கிறது. இந்த ஓடையில் விடுப்பட்ட பகுதிகளில் தடுப்புச்சுவர் அமைத்து அருகில் இருக்கும் குடியிருப்புகளை பாதுகாக்க வேண்டும். பெரியரெட்டியபட்டி காளியம்மன் கோயில் அருகில் சமுதாய கூடமும் கட்ட வேண்டும்.