UPDATED : நவ 14, 2026 07:38 PM
ADDED : நவ 14, 2026 07:38 PM
அ நிறம் | அளவு
தாண்டிக்குடி: தாண்டிக்குடியில் உலா வரும் ஒற்றை யானை விவசாய பயிர்களை சேதப்படுத்தியது.
சில தினங்களாக தாண்டிக்குடி முருகன் கோயில், பெருங்கானல், கானல்அடி பகுதியில் முகாமிட்டிருந்த ஒற்றை யானை அங்குள்ள பந்தல், காபி, அவகடா, ஏலக்காய், மலைவாழை, பீன்ஸ் பயிர்களை சேதப்படுத்தியது.
தாண்டிக்குடி மலைப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. அவற்றை விரட்ட வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து முயற்சித்தும் யானைகள் தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது. அவை பயிர்களை சேதப்படுத்துவதும் தொடர்கிறது. யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
