/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தீபாவளிக்காக சிறப்பு தீக்காய பிரிவு வார்டு
/
தீபாவளிக்காக சிறப்பு தீக்காய பிரிவு வார்டு
ADDED : அக் 19, 2025 03:14 AM
திண்டுக்கல்: தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் அடைபவர்களுக்கு உடனடி சிகிச்சை கிடைப்பதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு தீக்காய பிரிவு ஏற்படுத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 20 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு தீக்காய பிரிவு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தலா 10 ஆண்கள், பெண்கள் தங்கி சிகிச்சை பெறுவதற்கான வசதிகள், தீக்காயத்துக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நேற்று காலை முதல் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் பயன்பாட்டுக்கு வந்தது. தலா 2 டாக்டர்கள், நர்சுகள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுகின்றனர்.