திண்டுக்கல்- – கோயம்புத்தூர் இடையே சிறப்பு மெமு ரயில்
திண்டுக்கல்- – கோயம்புத்தூர் இடையே சிறப்பு மெமு ரயில்
ADDED : நவ 05, 2026 10:25 PM
திண்டுக்கல்: தீபாவளி பண்டிகை நவ.,8ல் கொண்டாடப்பட உள்ள நிலையில் வேலை நிமித்தமாக வெளியூர்களில் வசிப்பவர்கள், இளைஞர்கள், கல்லுாரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் சொந்த ஊர் திரும்ப துவங்கி உள்ளனர். எனவே பயணிகளின் சிரமமற்ற போக்குவரத்திற்காக மத்திய, மாநில அரசுகள் விரிவான அளவில் சிறப்பு பஸ், ரயில் சேவையை அறிவித்துள்ளன.
அதன்படி திண்டுக்கல்- – கோயம்புத்துார் இடையே பண்டிகை கால சிறப்பு மெமு ரயில் இன்று (நவ.,6), நாளை (நவ.,7) என இரண்டு நாட்கள் இயக்கப்படுகிறது. காலை 9:35 மணிக்கு கோயம்புத்துார் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்படும் மெமு ரயில் போத்தனுார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழநி, ஒட்டன்சத்திரம் வழியாக திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு மதியம் 1:10 மணிக்கு வந்து சேர்கிறது.
இதேபோல் மறுமார்க்கமாக திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மதியம் 2:00 மணிக்கு புறப்படும் மெமு ரயில் மாலை 5:40 மணிக்கு கோயம்புத்துார் சென்றடைகிறது.
