/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அடமானத்தில் ரேஷன் கார்டுகள் விசாரிக்க தனிப்படை அமைப்பு
/
அடமானத்தில் ரேஷன் கார்டுகள் விசாரிக்க தனிப்படை அமைப்பு
அடமானத்தில் ரேஷன் கார்டுகள் விசாரிக்க தனிப்படை அமைப்பு
அடமானத்தில் ரேஷன் கார்டுகள் விசாரிக்க தனிப்படை அமைப்பு
ADDED : ஜூலை 26, 2025 08:34 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் பூச்சிநாயக்கன்பட்டி பகுதியில் ரேஷன் கார்டுகளை அடமானமாக பெற்று விரல் ரேகையை மட்டும் கார்டு உரிமையாளர்களை வைக்க வைத்து பொருட்களை வாங்கிச் செல்லும் பெண் குறித்த வீடியோ வைரலான நிலையில் குடிமைப்பொருள் வழங்கல்துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்து விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் பேகம்பூர் அடுத்த பூச்சிநாயக்கன்பட்டியில் ரேஷன் கடைக்கு ஏராளமான ரேஷன் கார்டுகளுடன் ஒரு பெண் வந்தார். அவரை தொடர்ந்து சிலர் அங்கு வந்தனர். அந்த பெண்ணிடம் இருந்து ரேஷன் கார்டை வாங்கி ரேஷன் கடை ஊழியரிடம் கொடுத்து தங்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்து பொருட்களை வாங்கினர்.
பின்னர் அந்த பொருட்கள், ரேஷன் கார்டை அப்பெண்ணிடமே கொடுத்துவிட்டு சென்றனர். இதை அங்கு வந்த சிலர் விசாரித்தனர். அப்போது அவர்கள், 'தங்களின் ரேஷன் கார்டை அந்த பெண்ணிடம் அடமானம் வைத்து பணம் பெற்றோம்.
பணத்தை திரும்ப செலுத்தும் வரை கார்டுக்கான பொருட்களை வாங்கி அவரிடம் கொடுத்துவிடுவோம் 'என்றனர். அதிர்ச்சியடைந்த அவர்கள் ரேஷன் கார்டுகளை அடமானம் வாங்கிய பெண் குறித்த தகவலை அலைபேசியில் வீடியோ எடுத்து வெளியிட்டனர். இது வைரலானது.
குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில் 'ரேஷன் கார்டுகளை அடமானமாக பெற்ற பெண், அவற்றை பயன்படுத்தி ரேஷன் பொருட்கள் வாங்குவது போல் வீடியோ பரவி வருகிறது. இது குறித்து விசாரணை நடத்த தனிதாசில்தார் சக்திவேல் தலைமையில் பறக்கும்படை அதிகாரிகள் ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. அதன்படி ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீடியோவில் இருப்பது உண்மை என உறுதி செய்யப்பட்டால் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.