UPDATED : நவ 08, 2026 11:32 PM
ADDED : நவ 08, 2026 07:21 PM

அ நிறம் | அளவு
பழநி: பழநி கோயில்களில் தீபாவளியை முன்னிட்டு அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
பழநி முருகன் கோயில், திரு ஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில் அதிகாலை 4:00 மணிக்கு திறக்கப்பட்டு தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பழநி சண்முகபுரம் சித்தி விநாயகர் கோயிலில் ரூ.10, ரூ.20 ரூபாய் நோட்டுகளால் விநாயகர் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் பூஜையில் பங்கேற்று, சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர்.
